
திருவனந்தபுரம்: கேரளா தலைமைச் செயலகத்தில் வேண்டுமென்றே தீ விபத்தை
ஏற்படுத்தி தங்க கடத்தல் வழக்கின் ஆதாரங்களை அளிக்க முயற்சி நடந்ததாக
பா.ஜ.வினர் குற்றச்சாட்டி இரவு வரை போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.கேரளா தலைமை செயலகத்தில் இன்று திடீரென தீ விபத்து
ஏற்பட்டது. முக்கிய ஆவணங்கள் தீயில் நாசமாகின. இந்நிலையில் ஆளும்
கட்சியினர் வேண்டுமென்றே தீ விபத்து நாடகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன்
மூலம் தங்க கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிட்டுள்ளதாக
காங்., மற்றும் பா.ஜ. உறுப்பினர்கள் தலைமை செயலகம் முன் தர்ணா செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர்.எனினும் தலைமை
செயலக வளாகம் முன் அமர்ந்து இரவு வரை போராட்டத்தை தொடர்ந்தனர்இதனால் அங்கு
போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவர்கள் மீது போலீசார்
தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இந்த போராட்டத்தால் அங்கு பதற்றம்
காணப்படுகிறது.
No comments:
Post a Comment