கொரோனா காலத்தில் வீட்டில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள்
என்னென்ன என்று பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார்
ஆலோசனை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நம்முடைய நாட்டில்
கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் இன்னும்
ஒத்துழைத்தால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும். எல்லோரும்
முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். சாதாரணமாக வீட்டில்
இருக்கும் பொருட்களை வைத்தே முன்னெச்சரிக்கையுடன் நாம் இருக்க முடியும்.
அதில் முக்கியமான விஷயம் தெர்மாமீட்டர். இந்த வெப்பமானி மூலம் உடலின்
வெப்பநிலை சீராக இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். இதில் மெர்குரி
தெர்மாமீட்டர் உள்ளிட்ட பல்வேறு வகைகள் கிடைக்கும். இதை கடைகளில் வாங்கி
வீட்டிலேயே உடல் வெப்பநிலையை சோதனை செய்து கொள்ள முடியும்.
தெர்மா மீட்டரை தொடர்ந்து அடுத்த உபகரணம் என்று பார்த்தால் டிஜிட்டல் பல்ஸ்
ஆக்சிமீட்டர். இதை வைத்துதான் சென்னை கார்ப்பரேஷன் பரிசோதனை செய்ய
திட்டமிட்டுள்ளது. இதை வைத்து நோயாளியின் உடலில் ஆக்சிஜன் சேச்சுரேஜன் அளவை
கண்டுபிடிக்க முடியும். அதேபோல் அவர்களின் நாடி துடிப்பை கண்டுபிடிக்க
முடியும்.
இதை எளிதாக பயன்படுத்த முடியும். அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இந்த
டிஜிட்டல் பல்ஸ் ஆக்சிமீட்டர் இயங்குகிறது. அதனால் இது மிகவும்
பாதுகாப்பானது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சாதாரணமாக 95% முதல் 100% வரை
இருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 95%க்கும் குறைவாக இருந்தால் மிகவும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆக்சிஜன் குறைவாக இருந்தால் ஹைபாக்சியா
என்று கூறுவார்கள். இதய குறைபாடு, நுரையீரல் மற்றும் உடலில் பிற நோய்கள்
இருந்தால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
கொரோனா நோயாளிகளுக்கு உடலில் அறிகுறியே இல்லாமல் ஆக்சிஜன் அளவு
குறையும். இதனை சைலன்ட் ஹைபாக்சியா என்று கூறுவார்கள். வீட்டிலேயே
ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க இந்த டிஜிட்டல் பல்ஸ்
ஆக்சிமீட்டர் கண்டிப்பாக உதவும்.
அதேபோல் வீட்டில் ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்கும் பிபி அப்பாரட்டஸ் வைத்திருப்பது அவசியம். வீட்டிலேயே ரத்த அழுத்தத்தை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது, டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்கும் 130/80 என்று ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். அடிக்கடி ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்வது அவசியம். தற்போது டிஜிட்டல் முறையில் இயங்க கூட பிபி அப்பாரட்டஸ் கூட கிடைக்கிறது. இதன் மூலம் எளிதாக ரத்த அழுத்தத்தை கண்டுபிடிக்க முடியும். இதை வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதேபோல் வீட்டில் குளுக்கோ மீட்டரை வைத்து இருக்க வேண்டியது அவசியம். சர்க்கரை நோயாளிகள் சிலர் வீட்டில் இதை வைத்து இருப்பார்கள்.

உடலில் எந்த அளவில் குளுக்கோஸ் இருக்கிறது என்பதை எளிதாக கண்டுபிடிக்க
முடியும். இதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க
முடியும். இப்படிப்பட்ட சாதனங்களை வீட்டில் வைத்து இருப்பதன் மூலம்
வீட்டிலேயே நம்மை நாம் கண்காணிக்க முடியும், என்று பேராசிரியர் மற்றும்
மருத்துவர் முத்துச் செல்லக் குமார் ஆலோசனை வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் அம்மா கோவிட் பராமரிப்பு என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு
தொடங்கி வீட்டு சிகிச்சையில் உள்ளவர்களை கண்காணிக்கவும், உதவவும்
முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
பேராசிரியர் மற்றும் மருத்துவர் முத்துச் செல்லக் குமார் வெளியிட்டு
இருக்கும் முழு வீடியோவை இங்கு காணலாம்!
No comments:
Post a Comment