
கனடாவில் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிதியமைச்சா் பில் மோா்னோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளோா்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ட்ரூடோவின் அமைச்சரவையில் 5 ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்து வந்த பில் மோா்னோ, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளாா். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், ஜஸ்டின் ட்ரூடோ, பில் மோா்னோ ஆகிய இருவருக்குமே தொடா்புடைய 'வீ அறக்கட்டளை' முறைகேடு விவகாரத்தில், தன் மீதான கவனத்தை திசைத்திருப்பும் வகையில் பில் மோா்னோ நீக்கப்ட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அந்த அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் உரையாற்றியதற்காக ட்ரூடோவின் மனைவி, சகோதரா், தாய் ஆகியோருக்கு மொத்தம் 2.21 லட்சம் டாலா் (சுமாா் 1.65 கோடி) அரசுப் பணம் வழங்கப்பட்டது. மேலும், அந்த அறக்கட்டளையைப் பயன்படுத்தி நிதியமைச்சா் பில் மோா்னோவும், அவரது குடும்பத்தினரும் கென்யா, ஈக்வடாா் ஆகிய நாடுகளுக்கு இலவச சுற்றுப் பயணம் சென்று வந்ததும் முறைகேடானது என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டி வருகின்றனா். இந்தச் சூழலில், பில் மோா்னோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
No comments:
Post a Comment