
சென்னை: புதிய கல்வி கொள்கையை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் இன்று பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தினர். சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் நிலவுகிறது.
இப்புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை அறிவித்திருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், சட்டசபையில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.
இந்தியைப் போலவே தமிழ் மொழியையும் நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்குமா? என கேள்வி எழுப்பினார்.
source: oneindia.com
No comments:
Post a Comment