
போக்சோ சட்ட வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குற்ற தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் STOP CHILD ABUSE என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய குற்ற தடுப்புப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, சென்னையில் உள்ள 35 காவல் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுவதாக கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப் எண்ணிற்கு 112 புகார்கள் வந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் போக்சோ சட்டத்தின்கீழ் பாதிக்கப்படும் குழந்தைகள் இடைக்கால இழப்பீடு நிதி தற்போதுதான் வந்துள்ளதாகவும், 100 பேருக்கு தேவையான நிதி குறித்து அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர் சமரசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமையை மறைக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் ஜெயலட்சும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment