Latest News

தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA) இணைந்து 23.08.2020 அன்று ZOOM-APP எனும் காணொளி மூலம் COVID-19 பற்றிய கலந்தாய்வு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

 

 


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ்வின் உதவியால் தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், அமீரக & தாயக TIYA நிர்வாகிகள் மற்றும் அமீரகம் வாழ் நமது முஹல்லாவாசிகள் சிலரும் இதில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

இதில் தற்சமயம் அதிரையில் ஏற்பட்டுள்ள COVID-19 அசாதாரண சூழ்நிலை ( அச்ச உணர்வு ) பற்றியும் அதற்கான பாதுகாப்பை எந்த வகையில் முன்னெடுத்துச்  செல்லலாம் என நீண்ட கலந்தாய்வு நடைபெற்று கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) நமதூரில் தற்சமயம் ஏற்பட்டுள்ள மருத்துவ குறைபாடுகள், டாக்டர்களின் சிகிச்சை கிடைக்காமல் மக்கள் அவதியுறுவதால் அதனை சரி செய்வதற்கான  சாத்தியக்கூறுகள் பற்றியும் அதனை உடனே சரி செய்தால் மன உளைச்சல், பயம் மற்றும் பீதி இவைகளை மக்கள் மனதிலிருந்து அகற்றிடலாம் என கலந்தாலோசிக்கப்பட்டது.

2) நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை உயர்த்துவதற்க்கு சிலிண்டர்கள் தேவைப்படுகிறது.

 உடனடியாக நமது முஹல்லாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவதால் முதற்கட்டமாக ஐந்து சிலிண்டர்கள் தேவை என்று தாயகத்திலிருந்து கோரிக்கை வைத்தனர். இதனை உடனே வாங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது.

மேற்கண்ட கலந்தாய்வு சுமார் இரண்டு மணி நேரங்கள் நடைபெற்றது.

இன்ஷா அல்லாஹ் இத்தீர்மானங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த நமது TIYA அமைப்பு தேவையான நடவடிக்கைகளை அமீரகம் மற்றும் தாயக வாழ் நமது சகோதரர்கள் ஒத்துழைப்புடன் நிறைவேற்றும்.



அனைவரும் ஒத்துழைப்பு தருவதுடன் துஆ செய்யவும்.

என்றும் மக்கள் நலனில்

தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA)

அமீரக மற்றும் தாயக நிர்வாகம்







No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.