Latest News

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல்

புதுடில்லி: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் 3 மசோதாக்கள் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.கொரோனா சூழலில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று(செப்.,14) துவங்கியது. அக்.,1ம் தேதி வரை, தொடர்ந்து 18 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல், மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும்.கூட்டத்தொடரில், அவசர சட்டத்தை மாற்ற கொண்டு வரப்படும் 11 மசோதாக்கள் உட்பட, 23 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், விவசாயத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில், கடந்த 2020 ஜூன் 5ம் பிரகடனம் செய்யப்பட்ட 3 அவசர சட்ட மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.'விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை, வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா, 2020', மற்றும் 'விலை உறுதி, பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா, 2020' ஆகிய இரு மசோதாக்களையும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார். 'அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, 2020' ஐ, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.