Latest News

கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எவ்வளவு?

கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 2.96 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 18,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்டி இழப்பீடு தொகை குறித்து எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில் கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமாக 2,96,465 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்துக்கு 38,763 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு 31,673 கோடியும், குஜராத்திற்கு 26,305 கோடி ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்துக்கு 26,281 கோடி ரூபாய் வழங்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்துக்கு 18,147 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.