Latest News

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தலை தடுக்க பறக்கும் படை மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மார்த்தாண்டம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது இரு வேறு வாகனங்களை சோதனையிட்டபோது சுமார் 5 டன் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்!

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.