கரோனா தொற்று பாதித்திருந்தும் அறுவை சிகிச்சை செய்து 9 பேரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவனையின் டீன் டாக்டர் காளிதாஸ் கூறியதாவது:
''அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் கரோனா தொற்று பாதித்த 9 பேர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், விபத்தால் பாதிக்கப்பட்டுக் குடலில் ஓட்டை ஏற்பட்ட 3 பேர், ஒட்டுக் குடல் வெடித்து வயிற்றில் கிருமித் தொற்று ஏற்பட்ட இருவர், வயிற்றில் ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் குடல் அழுகிய ஒருவர், நோய்ப்பட்ட காலுடன் அனுமதிக்கப்பட்ட 3 பேர் என மொத்தம் 9 பேருக்குக் காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்து அவர்களின் உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இவர்களுக்குப் பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்கில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர, பொது அறுவை சிகிச்சைப் பிரிவில் அவசர அறுவை சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அனுமதிக்கப்பட்ட 419 பேருக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சிகிச்சைகளை பொது அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் லட்சுமி நாராயணி தலைமையில், பேராசிரியர்கள் சீனிவாசன், வெங்கடேசன், மருத்துவர்கள் உமா மகேஸ்வரி, ஜெயலட்சுமி, முருகதாஸ், வீரண்ணன், குணாள சுரேஷ், தேன்மொழி, அருள் முருகன், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்''.
இவ்வாறு டாக்டர் காளிதாஸ் கூறினார்.
No comments:
Post a Comment