Latest News

பூமியை மோதவரும் விண்வெளிப் பொருள்களில் இருந்து புவியைப் பாதுகாக்க ஒரு மையம்

மனித குலத்தை மிக முக்கியமான ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க வேல்சின் கிராமப்புர மலைப்பகுதியில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விண்வெளி பாதுகாப்பு மையம், "பூமியை நோக்கி வரும் பொருள்களை" கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளும். பூமியைத் தாக்க வரும் வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களையும் கண்காணிக்கும்.

இந்த விண்வெளி பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் ஜே டேட் 1997ம் ஆண்டு இந்த மையத்தை நிறுவினார். விண்வெளியில் இருந்து வரும் பொருட்களால் ஏற்படவிருக்கும் ஆபத்தை எதிர்கொள்ள பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால், தனியாக இந்த பாதுகாப்பு மையத்தை நிறுவியதாக ஜே டேட் கூறுகிறார்.

பூமியை மோதவரும் வால் நட்சத்திரங்களையும் சிறு கோள்களையும் முன்கூட்டியே கண்டறிந்தால், அவை பூமியை தாக்குவதை தவிர்க்க முடியும். அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது என டேட் கூறுகிறார்.

தனி மனிதர்கள் முதல் அதிகாரத்தில் உள்ளவர்கள் வரை யாருமே விண்வெளியில் இருந்து வரும் பொருட்களால் ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால் அவை பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.

ஜே டேட், பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி. ராணுவத்தில் பணிபுரிந்தபோது ஏவுகணை இயக்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். டேட் தனது பணியை மிகைப்படுத்தி கூறவில்லை. ஆனால், ''இது உண்மையில் அறிவியல் அல்ல, இது பாதுகாப்புக்காக விண்வெளியை நோக்கி நடத்தப்படும் எதிர்வினை நடவடிக்கை''.

''இதை அறிவியல் என்று கூறுவதை விட விண்வெளியை கண்காணிக்கும் செயல் என்றே கூறலாம். கண்காணிப்பது ராணுவ செயல்பாடுகளில் ஒன்று தானே'' என தனது பனியை ஜே விளக்குகிறார்.

1994ம் ஆண்டு வால் நட்சத்திரம் ஒன்று வியாழன் கிரகத்தை தாக்குவதை தொலைநோக்கி மூலம் கண்டபோது பூமிக்கு இருக்கும் ஆபத்துகளை உணர்ந்ததாக ஜே கூறுகிறார்.

அன்று வியாழன் கிரகத்தை தாக்கிய வால் நட்சத்திரம் பூமியை தாக்கியிருந்தால் அதனால் எப்படிப்பட்ட ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது'' என ஜே கூறுகிறார்.

இவ்வாறான ஆபத்துகளை எதிர்கொள்ள ராணுவத்துறையில் சில கட்டமைப்புகள் தேவை என்பதை ஜே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜேயின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

எனவே தனியாக விண்வெளி பாதுகாப்பு மையம் ஒன்று அமைத்தார். இந்த மையத்திற்கு நேஷ்னல் நியர் எர்த் ஆப்ஜட்ஸ் இன்ஃபோர்மேட்டிவ் சென்டர் என்று பெயர்.

தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த மையம் மூடப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு செல்ல விவசாய நிலங்களையும், ஆட்டு மந்தைகளையும் கடக்க வேண்டும். பூமியை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு தகுந்த சூழல் அங்கு இல்லை.

எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை நம்மால் கணிக்க முடியாது. ஆனால் பூமியை தாக்கவரும் வால் நட்சத்திரங்கள் மற்றும் சிறுகோள்களை நம்மால் முன்கூட்டியே அறிய முடியும்.

''விண்வெளி பொருட்கள் பூமியை தாக்கினால் மோசமான பாதிப்புகள் ஏற்படும்''

பேரழிவுகள் நிகழும்

2013ம் ஆண்டு செலியாபின்ஸ்க் என்னும் ரஷ்ய நகரின் மீது ஒரு விண்கல் மோதி முழு நாசம் விளைவது வெறும் நான்கு விநாடி இடைவெளியில் தவிர்க்கப்பட்டது. அந்த விண்கல் உடைந்து நொறுங்குவதை மக்கள் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தனர்.

10 கிலோமீட்டர் பரப்பளவில் நிகழும் இயற்கை பேரிடர்களை பேரழிவாக விவரிக்கிறோம். ஆனால் விண்வெளியில் இருந்து வரும் பொருட்களை நாம் தடுக்க தவறிவிட்டால் அது மனித இனத்திற்கே பேராபத்தாக முடிந்துவிடும்.

இதற்காக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. விண்வெளியில் இருந்து வரும் பொருட்களை கண்டறிந்து, அவற்றை திசைத்திருப்பவும் தொழில்நுட்பம் உள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க முடியும். ஆனால் ஆபத்து நெருங்கும்போதே அதற்காக நடவடிக்கை மேற்கொள்ள நாம் திட்டமிடுவோம்.

ஒவ்வொரு நாளும், அமெரிக்காவில் உள்ள மைனர் பிளானட் சென்டர் (எம்.பி.சி) கண்காணிக்க விரும்பும் விண்வெளி பொருட்களின் பட்டியலை வெளியிடுகிறது.

இந்த பட்டியலில் உள்ள விண்வெளி பொருட்கள் குறித்து, வேல்ஸ்சில் உள்ள ஸ்பேஸ்கார்டு சென்டர் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள விண்வெளி வீரர்கள் பலர் ஆராய்ச்சி மேற்கொண்டு, அன்றாடம் கண்காணித்து வருகின்றனர்.

தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி பொருட்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து மூன்று புகைப்படங்கள் எடுக்கமுடியும்.

புகைப்படங்களின் மூலம் பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியும்.

மேலும் சூரியனை எந்த சுற்றுப்பாதையில் அந்த பொருள் சுற்றிவருகிறது என்பதையும் கணித்து, அந்த தகவல்களை எம்.பி.சிக்கு ஆய்வாளர்கள் அனுப்புவார்கள்.

விண்வெளியில் இருந்து வரும் பொருட்களை திசை திருப்ப சில வழிமுறைகள் உள்ளன. அதாவது விண்வெளி பொருட்கள் பூமியை நோக்கி வருவதை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிகிறோமா? அல்லது சில தசாப்தங்களுக்கு முன்பே கண்டறிகிறோமா? என்பதை பொறுத்தே அவற்றை திசை திருப்புவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள முடியும்.

பூமியை நோக்கி வரும் பொருட்களை வேறு ஒரு பொருளுடன் மோத செய்து ஆபத்தில் இருந்து விடுபடுவது ஓர் எளிய வழி. இது தவிர அந்த விண்வெளி பொருள் இருக்கும் தளத்தில் அணு குண்டை வெடிக்க செய்வது மற்றொரு வழி முறை.

2013ம் ஆண்டு ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரத்திற்கு நேராக விண்கல் வெடித்தபோது, அதை எந்த தொலைநோக்கியும் கவனிக்கவில்லை. ஸ்பேஸ்கார்ட் மையம் உட்பட பல ஆய்வாளர்கள் தங்கள் தொரலைநோக்கி மூலம் வேறேதோ திசையில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தான் தன்னிடம் இருக்கும் தொலைநோக்கி மூலம் விண்வெளி பொருளை பின்தொடர முடியும், ஆனால் புதிதாக கண்டுபிடிக்க முடியாது என்பதை உணர்ந்ததாக ஜே கூறுகிறார். இந்த நிலை விரைவில் மாறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ஜே தற்போது பயன்படுத்தும் தொலைநோக்கியின் எடை 7.5டன். தன்னார்வலர்களின் உதவியுடன் தற்போது இந்த தொலைநோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜே கூறுகிறார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.