Latest News

திருச்சியில் பரபரப்பு! பிரபல நகை கடைகளில் அதிரடி சோதனை!

கேரளாவின் மணப்பாறையில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கடத்தல் பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணி செய்த ஸ்வப்னா சுரேஷ் செயல்பட்டுள்ளார் என்பது சுங்க இலாகா அதிகாரிகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் என் ஐ ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா திருச்சூர் மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கடத்தப்பட்டு இருக்கும் என அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் கொள்கின்றனர். தற்போது வரை இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் கேரள மாநில அமைச்சர் ஒருவரும் விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் தங்க கடத்தலில் கைதாகி உள்ள சோபனா உடன் தொடர்பு உள்ளதா என, திருச்சியில் பிரபல இரண்டு நகை நகை கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி என் எஸ் பி சாலையில் உள்ள இரண்டு பிரபல நகைக் கடைகளில், 15 பேர் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் குழு, 6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகிறது. இதனால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.