Latest News

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை: இலங்கை அரசு முடிவு

கொழும்பு: இலங்கையில் மாடுகளை வெட்ட தடை கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: இலங்கை பார்லி., வளாகத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டதில் பேசிய பிரதமர் ராஜபக்ஷே நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சட்டம் கொண்டு வர அரசு ஆலோசித்து வருகிறது என தெரிவித்து உள்ளார் . விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவைடைந்த பின்னர் மேற்கண்ட தடை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக வெளிநாடுகளில் இருந்து இறைச்சிகளை இறக்குமதி செய்யவும்முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.