
வேளச்சேரி ஏரியைச் சீரமைக்கும் கவலை அதிமுக அரசிற்கு இல்லை என திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் இன்று நாடாளுமன்றத்தில் புகார் எழுப்பினார்.
மக்களவையில் இன்று பேசிய தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சதுப்பு நிலம் மற்றும் ஈர நிலம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பொக்கிஷங்கள், அவற்றைப் பாராமரிக்க வேண்டியது அவசியம். ஆனால் தென்சென்னை தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி ஏரியில் உள்ள சதுப்பு நிலப்பகுதி குப்பைக் கிடங்காக உள்ளதாக கூறினார்.
இதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல் அதிமுக அரசாங்கம் தமிழகத்தில் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர், மெட்ரோ வாட்டர் நீரேற்று நிலையத்தில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுநீர், ராஜ்பவன் கால்வாயில் கலந்து கழிவுநீர் ஏரியில் வெளியேறுகிறது. இதுபற்றி பலமுறை சென்னை மாநகராட்சியிடம் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சரை, வேளச்சேரி ஏரியை சுற்றுச்சூழல் பாரம்பரிய பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும், அரசு போதிய நிதி ஒதுக்கி, வேளச்சேரி ஏரியை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
No comments:
Post a Comment