Latest News

சாதரண குடும்ப பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற நீட்‌- க்கு எதிராக ஒரு சமூகமாக குரல்‌ எழுப்புவோம்: நடிகர் சூர்யா

நீட் தேர்வு அச்சம் காரணமாக 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறித்து நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது பல எதிர்ப்புகளுக்கிடையே இன்று மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெற்றது. முன்னதாக நீட் தேர்வின் அச்சம் காரணமாக நேற்று (செப்.12) ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தற்கொலைகளுக்கு, அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து கருத்தை காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது என தெரிவித்துள்ளார். தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர், கொரோனா காலத்தில் கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்வி கொள்கைகளை வகுக்கிறார்கள் என கூறியுள்ள சூர்யா, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

Image

மேலும் அவர், "கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது; நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது. மாணவர்களின் நலன் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாத நம் கல்வி முறையில், இனி பெற்றோர்களும், ஆசியர்களுமே விழிப்புடன் இருக்க வேண்டும்" இவ்வாறு நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

நவீன கால துரோணர்கள்:

மகாபாரத காலத்து துரோணர்கள்‌ ஏகலைவன்களிடம்‌ கட்டை விரலை மட்டுமே காணிக்கையாகக் கேட்டார்கள்‌. நவீனகால துரோணர்கள்‌ முன்னெச்சரிக்கையுடன்‌ ஆறாம்‌ வகுப்பு குழந்தைகூட தேர்வெழுதி தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்‌ என்று கேட்‌கிறார்கள்‌. இதையெல்லாம்‌ கடந்து படித்து முன்னேறுகிறவர்களை 'பலியிட' நீட்‌ போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்‌திருக்கிறார்கள். 

Image

ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்:

ஒரே நாளில்‌ 'நீட்‌ தேர்வு' மூன்று மாணவர்களைக்‌ கொன்று இருக்கிறது. இன்று நடந்ததே நேற்றும்‌ நடந்தது. இனி நாளையும்‌ நடக்கும்‌. நாம்‌ விழிப்புடன்‌ இல்லாமல்‌ போனால்‌ மீண்டும்‌ மீண்டும்‌ நடந்து கொண்டே இருக்கும்‌. அப்பாவி மாணவர்களின்‌ மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது. சாதாரண குடும்பத்துப் பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற 'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒரு சமூகமாக நாம்‌ ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம்‌"

 

 

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.