
Tamil News Today Live Updates: தற்கால சூழலில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என பிரதமர் மோடி ஐநா சபையின் 75 ஆம் ஆண்டு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை அமளி விவகாரத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. நாடாளுமன்ற வளாகத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் மசோதா விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடன் வரும் 28-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்து உள்ளது இதற்கிடையே நாளை மறுதினம் நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியம் பேட்டி அளித்துள்ளார் வேளாண் மசோதா எதிர்ப்பில் தாங்கள் தீவிரமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வேளாண் மசோதாக்கள் குறித்தும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment