Latest News

பெற்றோரிடம் சொல்லாமல் பணியை தேடி தமிழக வந்த சிறுவன் - சிறுமி.. உதவி செய்த காவல்துறை.. பெற்றோர்கள் மகிழ்ச்சி.!!

இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள திம்மாபூர் மாவட்டத்தை சார்ந்த 11 வயது மாணவன் மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவி, கடந்த மார்ச் மாதத்தில் நாகலாந்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், இதனை அறிந்து கொண்ட இரண்டு சிறார்களும் அங்கேயே தங்கிரியிருந்து, தொழிற்சாலையில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், சிறுவர்களின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில், இவர்கள் எடுத்து வந்த அலைபேசி தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தை காண்பித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் காவல் துறையினருக்கு, நாகலாந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த காஞ்சிபுரம் காவல் துறையினர் சிறுவன் மற்றும் சிறுமிகளை மீட்டு, குழந்தைகள் நலத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன்பின்னர் கொரோனா பரவல் துவங்கியதால், சொந்த ஊருக்கு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது நாகலாந்தில் இருந்து குழந்தைகள் நல அதிகாரிகள் தமிழகத்திற்கு விமானம் மூலமாக விரைந்து, இருவரையும் விமானம் மூலமாக நாகலாந்திற்கு அழைத்து செல்கின்றனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.