
மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் தெற்கு தோடா பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் ஆட்டிறைச்சி விற்பதாக அனுமதி பெற்று மாட்டிறைச்சி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மாட்டிறைச்சியும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளரைக் கைது செய்தனர்.
முன்னதாக, இந்தூர் மற்றும் உஜ்ஜைனில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது மாடு படுகொலை தடுப்பு சட்டம் -2004 இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார் .
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் 12 மாதங்கள் வரை எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment