Latest News

நிர்மலா பற்றி திரிணாமுல் காங்., எம்.பி., தனிப்பட்ட விமர்சனம்: மன்னிப்பு கேட்க பா.ஜ., வலியுறுத்தல்

புதுடில்லி: பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்த திரிணாமுல் காங்., எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ., வலியுறுத்தியது.லோக்சபாவில் இன்று (செப்.,14) நடந்த மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கித்துறை கட்டுப்பாட்டு திருத்த சட்டத்தை பற்றி பேசினார். இதை எதிர்த்து திரிணாமுல் காங்., எம்.பி., சவுகதா ராய், நிர்மலா குறித்து பேசினார். நாட்டின் பொருளாதார நிலை அமைச்சரின் கவலைகளை கூட்டியுள்ளது என்று தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார்.இதையடுத்து பா.ஜ., எம்.பி., க்கள், இந்த பேச்சு நிர்மலா சீதாராமன் மீதான தனிநபர் விமர்சனம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூச்சலும் குழப்பமும் நிலவியது. பல உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபா நாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். அமைச்சர் நிர்மலாவை விமர்சனம் செய்ததற்காக சவகதா ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பார்லி விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.