
திருச்சி மாவட்டத்தில் உள்ள புள்ளம்பாடி பகுதியை சார்ந்தவர் லட்சுமி. இவர் தனது மகனிடம் இருந்து சொத்துக்களை மீட்டு தரக்கூறி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், தனது கணவர் கடந்த 2010 ஆம் வருடத்தில் இறந்துவிட்டதால், தனது மகன் ஜோதிமணியுடன் இருந்து வந்தேன்.

எனது கணவர் கோபால் ஹாலோ பிளாக் செய்து விற்பனை செய்து வந்த நிலையில், இந்த தொழிலை இப்போது நான் கவனித்து எனது மகனுடன் வசித்து வருகிறேன். எனது கணவரின் இறப்பிற்கு பின்னர், எனது மகன் சொத்துக்களை கேட்டு மிரட்டி வருகிறார்.

இந்த புகாரை ஏற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபாலுக்கு மற்றொரு மகள் இருக்கும் நிலையில், தாய் இறந்த பின்னர் சொத்து தகராறு ஏற்படும் என்ற காரணத்தால், அவரது மகன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment