
கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வரும்
நிலையில் கடந்த சில வருடங்களாக பாஜகவில் இருந்த கௌதமி அக்கட்சியில் இருந்து
விலக முடிவு எடுத்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது
ஜெயலலிதாவின் தீவிர அபிமானியாக இருந்த நடிகை கௌதமி,
அவருடைய மறைவுக்குப் பின்னர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய
செய்தி தொடர்பாளர் பதவி வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது

இந்த
நிலையில் கடந்த சில மாதங்களாக பாஜக கட்சிக் கூட்டங்கள்,ஆலோசனை கூட்டங்கள்
ஆகியவற்றை கலந்து கொள்ளாமல் கௌதமி ஒதுங்கி இருப்பதாகவும் விரைவில் அவர்
பாஜகவில் இருந்து விலக இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஒருவேளை கௌதமி பாஜகவில் இருந்து விலகினால் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
No comments:
Post a Comment