Latest News

ஓசி தேநீர் கேட்டு ரகளை.. தே.மு.தி.க பிரமுகர் கைது...!!

சென்னையில் உள்ள பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலை பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் பாஷா (வயது 46). இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில், துறைமுகம் தேமுதிக செயலாளர் ரவிச்சந்திரன் என்ற ஆண்ட்ராஸ் (வயது 38), தனது நபர்களுடன் வந்துள்ளார்.

இந்த தேநீர் கடைக்கு வந்தவர் நண்பர்களுடன் தேநீர் அருந்திவிட்டு, பணம் கேட்கையில் தகராறு செய்துள்ளார். மேலும், தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பிஸ்கெட் பாட்டிலை உடைத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனால் பயந்துபோன பாஷா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் துறைமுகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.