ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. இதன் பரவலைத் தவிர்க்க உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் கடுமையாக
வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஐ.நா., சபை பெண்கள் நல நிர்வாக இயக்குனர்
பூம்சைல் மலம்போ நகூகா தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக
ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் 25 வயது முதல் 34 வயதுக்குள் உள்ள பெண்கள்
வரும் 2021ம் ஆண்டு அதிகமாக பாதிப்படைந்து வறுமை கோட்டுக்கு கீழ்
தள்ளப்படுவர். தெற்காசிய நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், நேபாளம்,
பூட்டான், இந்தியா, சீனா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில்
இளம் பெண்கள் வேலை வாய்ப்பின்றி அவதி அடைவர்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய தெற்காசிய
நாடுகளில் கிட்டத்தட்ட 4.5 கோடி பெண்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியால்
வாழ்வாதாரம் இன்றி அவதி அடைவர். உலகிலேயே தெற்காசிய நாடுகள் மற்றும் தெற்கு
ஆப்பிரிக்க நாடுகளில் சர்வதேச வறுமை கோட்டிற்குகீழ் வாழும் பெண்களின்
எண்ணிக்கை அதிகம். கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முன்னர் இப்பகுதிகளில்
வாழும் பெண்களின் சர்வதேச வறுமைக் கோடு அளவு 10 சதவீதமாக இருந்தது. தற்போது
13 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வறுமைக்கோட்டுக்கு கீழே
வாழும் 100 ஆண்களுக்கு 118 பெண்கள் 2021ம் ஆண்டில் இருப்பர் என
கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்களைவிட பெண்களை அதிகமாக வாடுவது தெரியவந்துள்ளது. உலகம் முழுக்க கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் 9.5 கோடிபேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் தள்ளப்படுவர். இதில் 4.5 கோடி பேர் பெண்கள். 2030ம் ஆண்டு முடிவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பல ஆண்டுகளாக தெற்காசிய நாடுகளில் நிலவி வந்த வறுமை படிப்படியாக அந்தந்த நாட்டு அரசுகளால் போகப்பட்டு பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது வைரஸ் தாக்கம் அவர்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் அதள பாதாளத்திற்கு தள்ளியுள்ளது' என, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment