Latest News

நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது -உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுவாய்ப்பு வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை செப்.,13-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது.

கொரோனா அச்சத்தால் ஒருவேளை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து நாளை தேர்வு எழுத முடியாமல் விடுபடும் மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

இந்நிலையில் வட மாநிலத்தைச் சார்ந்த ஆஷிஷ் மகேந்திரா என்பவர் புதிய ரிட் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அதில் "நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதில் மீண்டும் வாதங்களை முன்வைக்க ஏதுமில்லை என்பதால் மனுதாரரின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப் படுகின்றன. மேலும் நாடு முழுவதும் ஒரே விதமான கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்தப்படுவதால் தற்போது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் எப்படி மறுதேதி வழங்க முடியும்? அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.