
பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 122
தொகுதிகளும், பா.ஜ.,விற்கு 121 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர்
நிதிஷ்குமார் கூறியுள்ளார்.பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ. கூட்டணி
ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் இம்மாதம் 28 அடுத்த மாதம் 3
மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடக்கிறது. லாலு பிரசாத்
யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையில், காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட சில
கட்சிகள் இணைந்து அமைத்துள்ள, 'மெகா' கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து
விட்டது. பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில்
இழுபறி நீடித்து வந்த நிலையில், அது இன்று முடிவுக்கு வந்ததுஇது தொடர்பாக
முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு
122 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், ஜிதேந்திர மஞ்சி தலைமையிலான எச்ஏஎம் கட்சி 7
தொகுதிகளில் போட்டியிடும். பா.ஜ.,வுக்கு 121 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதில், அக்கட்சி விகாஷீல் இன்சான் கட்சிக்கு தொகுதிகளை பா.ஜ., ஒதுக்கும்.
அது குறித்து பேச்சுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment