
நாமக்கல்லில் முட்டையின் விலை ஒரே நாளில் 25 காசுகள் குறைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் தினசரியாக 4 கோடிய 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யக்கூடிய முட்டைகளுக்கான விலையை தினசரி நாமக்கல் மண்டலத்தின் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி முட்டையின் கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளாக இருந்த நிலையில் திடீரென இன்று 25 காசுகள் குறைத்து 5 ரூபாயாய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 நாட்களாக முட்டையின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில், வட மாநிலங்களில் தசரா பண்டிகை தொடங்கவுள்ளதாலும், தமிழகத்திலும் ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜை வர உள்ளதாலும் முட்டை விற்பனை குறைந்து வருவதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். வரும் காலங்களிலும் மேலும் முட்டையின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கோழிப்பண்ணையாளர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment