
ஹரியாணாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்ற வழக்குகளில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹரியாணா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அனில் கூறுகையில், ஹரியாணாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களை அனுப்பிய 370 வழக்குகளில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 1.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதாமாக செல்பவர்களை தடுக்க ஒரு ஐ.ஜி. தலைமையில் 6 எஸ்.பி. க்கள் உள்ளிட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இவர்கள் நடத்திய விசாரணையில், அமெரிக்கா, மலேசியா, மெக்ஸிகோ, துபை போன்ற நாடுகளளில் இருந்து சட்டவிரோதமாக வந்ததாக கூறி, ஹரியாணாவைச் சேர்ந்த 421 இளைஞர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதன் விளைவாக நடத்திய விசாரணையில், கடந்த 4 மாதங்களில் 646 புகார்கள் வந்துள்ளன, அவற்றில் 370 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் 276 புகார்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட 51 புகார்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டில் 370 புகார்கள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 351 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
2008 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் கீழ் 163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் சிறப்புக் குழு அமைக்கப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல், குடிவரவு சட்டத்தின் கீழ் சிறப்புக் குழுவால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 12 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 94 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment