
உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல், அமைதி, இலக்கியம் ஆகிய 6 பிரிவுகளில் இந்த பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் நாளான இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இதில், மருத்துவத்திற்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழி வகுத்தது.
உலக அளவில் ஹெபடைட்டிஸ் நோய் பாதிப்பால் 70 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதன் மூலம் நாள்பட கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் புற்று நோய் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.
நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment