
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்குகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 73 ஆயிரத்து 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 லட்சத்து 79 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 926 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவில் இருந்து 59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் குணமடைந்த நிலையில், 8 லட்சத்து 83 ஆயிரத்து 185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 85.52 ஆகவும், இறப்பு சதவீதம் 1.54 ஆகவும் உள்ளது.
No comments:
Post a Comment