
புதுச்சேரியில் ஆற்றுக்குள் வெட்டி வீசப்பட்ட இளைஞர் ஒருவர் இரவு முழுவதும் துடிதுடித்து பின்னர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.
அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞரை மர்மநபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். பின்னர் அவரை கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி ஆற்றுக்குள் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
இரவு முழுவதும் அவர் முனகலுடன் ஆற்றுக்குள் கிடந்துள்ளார். இந்நிலையில் காலையில் வில்லியனூர் சங்கரபரணி ஆறு வழியாக சென்ற மக்கள் அரவிந்தின் முனகல் சத்தத்தை கேட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அரவிந்த் பிழைத்துக் கொண்டார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் ரவுடி கொக்கு கார்த்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
No comments:
Post a Comment