
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான களப்பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சைலண்டாக நடந்து வருகிறது.
திமுக முழுவீச்சில் பணிகளை தொடங்கிவிட்டது. வதிமுக, மக்களை கவரும் வகையில் பல்வேறு நலத்திட்ட நலத்திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று(அக்.11) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:
1. டி.ஆர்.பாலு (பொருளாளர்)
2. சுப்புலட்சுமி ஜெகதீசன் (துணை பொதுச்செயலாளர்)
3. ஆ.ராசா (துணை பொதுச்செயலாளர்)
4. அந்தியூர் ப.செல்வராஜ் (துணை பொதுச்செயலாளர்)
5. கனிமொழி எம்பி (திமுக மக்களவை குழு துணை தலைவர்)
6. திருச்சி சிவா எம்பி (கழக கொள்கை பரப்புச் செயலாளர்)
7. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி (செய்தி தொடர்புச் செயலாளர்)
8. பேராசிரியர் அ.ராமசாமி.
8 பேர் கொண்ட இக்குழு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க உள்ளது.
newstm.in
No comments:
Post a Comment