
சென்னை: தமிழகத்தில் இன்று (அக்.,06) அதிகபட்சமாக சென்னையில் 947 பேர்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு இதுவரை 1.59
லட்சம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக
சென்னையில் 1,306 பேருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. இதன்மூலம் அங்கு
இதுவரை 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று,
கோவையில் 434 பேருக்கும், சேலத்தில் 326 பேருக்கும், செங்கல்பட்டில் 283
பேருக்கும், திருவள்ளூரில் 263 பேருக்கும், தஞ்சாவூரில் 224 பேருக்கும்,
காஞ்சிபுரத்தில் 156 பேருக்கும், திருப்பூரில் 152 பேருக்கும், நாமக்கலில்
146 பேருக்கும், கடலூரில் 145 பேருக்கும் கொரோனா
உறுதியாகியுள்ளது.உயிரிழப்புஇன்று சென்னையில் 25 பேரும், சேலத்தில் 9
பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், திருவள்ளூரில் 6 பேரும், திருப்பூர்,
வேலூரில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கடலூர், நாமக்கல், தேனியில் தலா 2
பேரும், அரியலூர், கோவை, திண்டுக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருப்பத்தூர்,
திருவண்ணாமலை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 71
பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.டிஸ்சார்ஜ்இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக
சென்னையில் 947 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
அங்கு மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை
1,59,237 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கோவையில் 494
பேரும், சேலத்தில் 372 பேரும், செங்கல்பட்டில் 357 பேரும், தஞ்சாவூரில் 344
பேரும், கடலூரில் 276 பேரும், திருப்பூரில் 254 பேரும், திருவள்ளூரில் 207
பேரும், திருவண்ணாமலையில் 174 பேரும், திருவாரூரில் 165 பேரும் டிஸ்சார்ஜ்
ஆகியுள்ளனர்.மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்
No comments:
Post a Comment