
சோத்துப்பாறை அணையிலிருந்து விவசாயப் பணிகளுக்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணையின் மதகின் இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம், சோத்துப்பாறை அணையிலிருந்து நன்செய் மற்றும் புன்செய்விவசாய நிலங்களின் பாசனத்திற்கும், நகராட்சிக் குடிநீர்த் தேவைக்காகவும், வேளாண் விவசாயிகள், மற்றும் பொதுமக்களிடமிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனனர்.
இதைத் தொடர்ந்து 'தமிழக முதல்வர் எடப்பாடி .பழனிச்சாமி அவர்கள் தண்ணீர் திறந்து விட அறிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அணையின் மதகின் இயக்கத்தைத் துவக்கி வைத்தார்.இன்று, முதல் போக சாகுபடிக்காக 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங் களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும், பெரியகுளம் நகராட்சி குடிநீர்த் தேவைக்கும் சேர்த்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேலும், இதனால் மொத்தம்2,865, ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும் எனவும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்மேலாண்மை மேற்கொண்டு உயர்மகசூல் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் பல்லவி பல்தேவ், பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் STK ஜக்கையன் அ.தி. மு.க, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment