
சென்னை: "ஹிந்தியும் தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகி இருக்குன்னா அதுக்கு திமுகதான் காரணம்" என்று நறுக்கென கருத்து சொல்லி உள்ளார் இல.கணேசன்!
சுதந்திரப் போராட்ட வீரர் மபொசியின் 25-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மபொசியின் புகழை நினைவு கூர்ந்த அவர், தற்போதைய அரசியல் நிலவரம், உபி தலித் பெண் பலாத்கார மரணம், பாஜக நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார். இல.கணேசன் சொன்னதாவது:
"தமிழ், தமிழ் என்று டி-ஷர்ட்டில் போட்டுக்கொண்டால் மட்டும் தமிழ் வாழாது.. ஹிந்தியும்...
தெரியாமல், தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகியிருப்பதற்கு காரணமே திமுகதான்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டம், ஒழுங்கை மிக சிறப்பாக கையாண்டு வருகிறார்.. பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு கடுமையான நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் நிச்சயம் எடுப்பார்.
"எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும்".. திமுகவின் ஒரு தலைவர் பேசும் பேச்சா இது? கிளம்பியது சர்ச்சை
ஆனால், உபியில் பொதுமக்களின் ஆதரவை பெறுவதற்காக கீழே விழுவது போல் ராகுல் காந்தி நாடகமாகி இருக்கிறார்.. அதிமுகவில் தற்போது நிலவி வரும் குழப்பங்களால் கட்சி உடையாது.. ஆனால், அக்குழப்பங்களை அக்கட்சியினர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவராவிட்டால், அடுத்தமுறை அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் பாஜகவில் தேசிய அளவில் பொறுப்புகளில் உள்ளனர்.. எச்.ராஜாவின் திறமைக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்.. அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும்" என்றார்.
source: oneindia.com
No comments:
Post a Comment