
கட்டணம் அதிகம் வசூலித்த தனியார் கொரோனா சிகிச்சை மையம், தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் வருவதாக புகார்.
சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரானா சிகிச்சைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகம் வசூலிப்பதாக சென்னை ஆதம்பாக்கத்தில் சேர்ந்த கணேஷ் என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் கடந்த ஜூலை 25ஆம் தேதி தனது தந்தை குமார் என்பவரை அனுமதித்ததாகவும் அவர் ஆகஸ்ட் 3ம் தேதி இறந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். எட்டு நாட்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தாலும் வெவ்வேறு நாட்களில் நான்கு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய், கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனைக்கு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவாக இருந்தால் கூட ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மருத்துவமனை எந்த விதிகளையும் பின்பற்றாமல் அதிக கட்டணம் வசூலித்து மட்டுமல்லாமல், உடலை ஒப்படைப்பதற்கு இரண்டு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என நிர்பந்தப்படுத்தியதாகவும், சிகிச்சை அளித்த ஐந்து நாளுக்கும், உடல் வைத்திருக்கப்பட்ட இரண்டு நாளுக்கும் சேர்த்து மொத்தம் 7,02,562 அதிகமாக மருத்துவமனை நிர்வாகம் வசூலித்திருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது தந்தையின் மருத்துவ செலவு இன்சூரன்ஸ் மூலம் பெறுவதற்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் கேட்டுள்ளதாகவும் அதற்காக மருத்துவ சிகிச்சை விவரங்களை கேட்டதற்கு வேறு ஒருவரின் சிகிச்சை விவரங்களை வழங்கியதாகவும் இது தொடர்பாக முறையிட்டபோது மருத்துவ நிர்வாகத்திலிருந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையை தவிர மற்ற தொகையை திரும்ப தரக்கோரியும், மருத்துவமனை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment