Latest News

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியிட்டது

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்டது.

தனது ட்விட்டர் பதிவொன்றின் மூலம் இந்த நிலையான செயல்பாட்டு வழிமுறைகள்/ வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டார்.

இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* 2020 அக்டோபர் 15-க்கு பிறகு படிப்படியாக பள்ளிகள் மற்றும் பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

* உள்ளூர் நிலைமையின் அடிப்படையில், தொடர்புடைய பள்ளிகள்/நிலையங்களின் நிர்வாகங்களோடு கலந்தாலோசித்து அவற்றை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை எடுக்கலாம்.

* பள்ளியின் அனைத்து இடங்களும் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும்.

* அவசர காலக் குழு, பொது உதவிக் குழு, சுகாதார ஆய்வுக் குழு போன்ற குழுக்களை பள்ளிகள் அமைக்க வேண்டும்.

* தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும்.

* அறிவுறுத்தல்கள் தாங்கிய அறிவுப்புகளை போதுமான அளவில் வைக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.