
உலக பெண்குழந்தைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆப்கான் சிறுமி ஒருவர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இந்த படம் அனைவரின் மனதை வென்றுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சதவீதத்தின்படி மற்ற பிரபலமான வீரர்களின் புகைப்படங்களை போல இந்த புகைப்படங்களும் வரவேற்பை பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் கிரிக்கெட் பிரபலமடைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டும் வகையில், இந்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் நாட்டில், இவ்வளவு ஆர்வமுடைய சிறுமிகள் இருந்தபோதிலும் இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் பதிவு செய்யவில்லை. அத்துடன், 1995ல் தான் கிரிக்கெட் வாரியமே உருவாக்கப்பட்டது. 2001 முதல் தான் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுகிறது.
No comments:
Post a Comment