
புதுடில்லி: ஹத்ராஸ் சம்பவத்தில், பலியான இளம்பெண் மீது அவதூறு
பரப்புவது பிற்போக்குத்தனமானது என காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா
தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித் பெண், கூட்டு
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் தாக்கப்பட்டதில் படுகாயம்
அடைந்த அந்த பெண், சமீபத்தில் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடல்,
பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. இந்த
வழக்கு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக
சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது.இந்நிலையில், காங்.,
பொதுச்செயலாளர் பிரியங்கா டுவிட்டரில் பதிவிட்டதாவது: ஒரு பெண்ணின் தன்மையை
இழிவுபடுத்துவதும், அதற்காக ஒரு கட்டுக்கதையை உருவாக்குவதும்,
குற்றத்துக்கு அவளையே காரணமாக்குவதும் பிற்போக்குத்தனமானது.
ஹத்ராஸ் சம்பவத்தில் கொடூர வன்முறை நிகழ்ந்துள்ளது.
குடும்பத்தினரின் அனுமதியின்றி இளம்பெண் எரிக்கப்பட்டுள்ளார்.
அப்பெண்ணுக்கு தேவை நீதிதான்; அவதூறு அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment