ஸ்ரீநகர்: ஒராண்டுக்கு மேலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த
காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சிதலைவர் மெகபூபா முப்தி விடுதலை
செய்யப்பட்டார். மத்திய அரசு கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி
காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.
காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு
வெளியிட்டது. காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்ததற்கு சீனா, பாகிஸ்தான்
நாடுகள் கண்டனம் தெரிவித்தன.காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்
கடுமையானஎதிர்ப்பு தெரிவித்தன. காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய கட்சிகளாக
இருந்துவரும் தேசிய மாநாட்டு கட்சியின்தலைவரான பரூக் அப்துல்லா, மற்றும்
அவரது மகனும் முன்னாள் முதல்வருமான ஓமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி
தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முதலில் சிறைசாலைகளிலும் பின்னர் வீட்டுகாவலிலும்
வைக்கப்பட்டனர். இதனிடையே அரசியல் கட்சி தலைவர்களை விடுவிக்க வேண்டும் என
பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் தேசிய மாநாட்டு கட்சிதலைவரான பரூக் அப்துல்லா விடுதலை
செய்யப்பட்டார். இருந்த போதிலும் மக்கள் ஜனநாயக கட்சிதலைவரும் முன்னாள்
முதல்வருமான மெகபூபா முப்தியை விடுதலை செய்வது குறித்து அரசு மவுனம்
காத்துவந்தது. இந்நிலையில் மெகபூபாமுப்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்
என காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment