
உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
உ.பி.யின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் .பிரியங்கா காந்தி தொடர்ந்து உ.பி.அரசை விமர்சனம் செய்து வருகிறார். தற்போது அவர், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பாக்பத்தில் இன்று காலை இரும்பு வணிகர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் கடத்தப்பட்ட ஒரு ஊடக செய்தியை இணைத்து உ.பி. அரசை விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தி தனது ட்வீட்டில் கூறியுள்ளதாவது:
"இன்று காலை பாக்பத்தில் ஒரு இரும்பு வணிகர் கடத்தப்பட்டார். உ.பி.யில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. வர்த்தகர்கள் பாதுகாப்பாக இல்லை. குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. அரசாங்கத்தில் இருப்பவர்கள் தேர்தல் கூட்டங்களில் வெற்றுப் பேச்சுகளை வழங்குகிறார்கள். ஆனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. மாநிலத்தில் குற்றங்கள் பெருகி வருவதால் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment