
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் எந்தவித மத்தியஸ்தர்களும் இன்றி நேரடியாக விவசாயிகளிடத்தில் கலந்துரையாடுங்கள் என பிரதமர் மோடியிடம் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிந்தர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார்.
சுக்பிந்தர் சிங் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயத்துறை செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை விவசாயிகள் புறக்கணித்திருப்பது சரியான செயல், இது தொடர்பாக அவரால் ஒன்றும் இயலாது என்பதை விவசாயிகள் புரிந்துகொண்டுள்ளனர்.
தலைக்கு மேல் வெள்ளம் பாய்கிறது என்பதை பிரதமர் உணரவேண்டும், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட நாட்டின் பிற பகுதி விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர், கொரோனா பரவலுக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்திருப்பது தங்களின் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் அழித்துவிடும் என்பதாலேயே.

எனவே இதுபோன்ற சூழலில் மத்தியஸ்தத்திற்காக யாரையும் நம்பியிராமல் பிரதமர் மோடி, இதில் தலையிட்டு நேரடியாக விவசாயிகளிடமும், அனைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வேளாண் சட்டங்களை திருபப்பெற்றுவிட்டு, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாத்திடும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு சுக்பிந்தர் சிங் பாதல் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவர் சுக்பிந்தர் சிங் பாதலின் மனைவியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment