
பாட்னா: பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் ஹில்சா தொகுதியில் ஜக்கிய
ஜனதா தளம் வெறும் 12 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்வெற்றிபெற்றுள்ளது. இது
குறித்து தேர்தல் கமிஷன் தன்னுடைய இணையதளத்தில் தெரிவித்து இருப்பதாவது:
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைக்கான தேர்தலில் ,ஹில்சா
தொகுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த கிருஷ்ணமுராரி சரண் என்பவர்
போட்டியிட்டார். இவரை எதிர்த்து லாலுவின் கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள
வேட்பாளர் சக்திசிங் யாதவ் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் 10ம் தேதி
வெளியாகின. இதில் கிருஷ்ணாமுராரி சரண் 61,848 ஓட்டுக்கள் பெற்றார். இவரை
எதிர்த்து போட்டியிட்ட சக்திசிங்யாதவ் 61,836 ஓட்டுக்களை பெற்றார்.
என அதன் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக
ஆர் ஜேடி தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: ஹில்சா தொகுதியில்
போட்டியிட்ட சக்திசிங் யாதவ் 547 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்
வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வாங்க
காத்த்திருக்கச்செய்தனர். பின்னர் முதல்வர் இல்லத்தில் இருந்து வந்த
அழைப்பை அடுத்து அங்கு சென்று விட்டு திரும்பிய அதிகாரி போஸ்டல் ஓட்டுக்கள்
ரத்து செய்யப்பட்டதால் சக்திசிங்யாதவ் 13 ஓட்டுக்கள் வித்தியாசத்தில்
தோல்வியைடைந்ததாக கூறப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது.
No comments:
Post a Comment