
செங்கம் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பாச்சல் அருகே பெங்களூருலிருந்து பண்ருட்டி சென்று கொண்டிருந்த காரும், புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு கொரியர் பார்சல் ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானகின. இந்த விபத்தில் பண்ருட்டியைச் சேர்ந்த குமார், நிஷாந்த் மற்றும் அவரது 2 வயது குழந்தை தேவதர்ஷினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த நிஷாந்தின் மனைவி சுகன்யா, அவரது 5 வயது மகள் கிருத்திகா ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment