
தாராவியில் புதிதாக இன்று 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவி. இங்கு ஆரம்பத்தில் கரோனா வேகமாக பரவி வந்தது. பின்னர் மாநில அரசின் தீவிர நடவடிக்கையால் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், சமீப நாள்களாக தாராவியில் கரோனா மீண்டும் பரவி வருகிறது.
இன்று மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,629 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், அவர்களில் 3,307 பேர் ஏற்கெனவே குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
தற்போதைய நிலவரப்படி 11 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட தாராவியில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment