சென்னை காவல் துறைக்கு ரூ.40 கோடி செலவில் அதிநவீன வசதிகள் கொண்ட 7 மாடி கொண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் குற்றச்செயல்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக சைபர் குற்றங்களை தடுக்கவும் சென்னையின் 12 காவல் மாவட்டங்களிலும் தனித்தனியாக பிரிவு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் சென்னை பெருநகரில் 2 லட்சத்துக்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்காக காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்படி, முழுக்கமுழுக்க அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு 7 மாடி கட்டுப்பாட்டு அறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்அமையவுள்ள இந்த கட்டிடத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுபணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 8 மாடி கட்டிடத்துக்கு அருகிலேயே சுமார் ரூ.40 கோடிசெலவில் இந்தக் கட்டிடம் அமைய உள்ளது.
இதில் அதிகாரிகளுக்கான அலுவலகம் எதுவும் இல்லாமல் முதல்இரு தளங்களில் நவீன சைபர்ஆய்வகமும் அதற்குமேல்உள்ள தளங்களில் சென்னையின் போக்குவரத்தை நேரடியாக கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையும் அமையஉள்ளன. போக்குவரத்து போலீஸாருக்கானஅலுவலகம் உட்படமேலும் சில பயன்பாட்டுக்காகவும் தனித்தனி அலுவலகமும் ஒதுக்கப்பட உள்ளன.
வெளிநாடுகளில் உள்ளதுபோல்
7-வது தளத்தில் வெளிநாடுகளில் உள்ளதுபோல், சென்னை முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த உள்ளதாக உயர் போலீஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment