
சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் என 72 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல் ஆணையர் மகேஷ் குமார்
அகர்வால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக
குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் 72 பேரை பணி
யிட மாற்றம் செய்தும், மாற்றப்பட்டவர்களுக்கு புதிய இடங்களையும் காவல் ஆணையர் வழங்கியுள்ளார்.
அதன்படி, தாம்பரம் குற்றப்பிரிவில் பணியாற்றிய டி.வெங்கடேசன், மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்.லட்சுமி, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றலாகியுள்ளார். விருகம்பாக்கத்தில் பணியாற்றிய எஸ்.சிவகுமார் நுண்ணறிவு பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியல்மேலும், கடந்த சில மாதங்களாக கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 39 காவல் ஆய்வாளர்களுக்கும் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய குற்றப்பிரிவில் இருந்த 4 ஆய்வாளர்களுக்கும் காவல் நிலையங்களில் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment