
80 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை வென்ற அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடென் மாறியுள்ளார். நாடு முழுவதும் வாக்குச்சீட்டுகள் தொடர்ந்து கணக்கிடப்படுவதால், எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று புதன்கிழமை ஒரு ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஜோ பிடன் 8,00,11,000 வாக்குகளைப் பெற்றார், அதிபர் டொனால்ட் டிரம்ப் 7,38,00,000 வாக்குகளைப் பெற்றார். டிரம்பின் வாக்குகள் அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது மிக அதிகமான மக்கள் வாக்குகளைப் பெறும் வேட்பாளராக அவரை மாற்றியுள்ளது என்று சி.என்.என் தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடென் 306 தேர்தல் வாக்குகளைப் பெற்றுள்ளார், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப் 232 வாக்குகளைப் பெற்றுள்ளார். வெள்ளை மாளிகைக்கான போட்டியில் வெற்றி பெற 538 இல் குறைந்தபட்சம் 270 தேர்தல் வாக்குகளைப் பெற வேண்டும்.
கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அமெரிக்கர்கள் இந்த ஆண்டு அஞ்சல் மூலம் வாக்களித்தனர். மேலும் நவம்பர் 3 ஆம் தேதி தேர்தல் தினத்தைத் தொடர்ந்து சில நாட்கள் நீட்டிக்கக்கூடிய நீண்ட வாக்கு எண்ணிக்கை இருக்கும் என்று நிபுணர்கள் பல மாதங்களாக எச்சரித்தனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, திங்களன்று முறையான மாற்றம் செயல்முறையை தொடங்க ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி டிரம்ப். இருந்தாலும் அவர் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
நீதிமன்றங்களில் முக்கிய மாநிலங்களில் முடிவுகளை சரிபார்க்க வேண்டும் என்ற டிரம்ப்பின் முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துள்ளன. மிச்சிகனில் ஜோ பிடென் வெற்றி பெற்றதாக முடிவு அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து செவ்வாயன்று, பென்சில்வேனியா மற்றும் நெவாடாவில் ஜோ பிடெனின் வெற்றி அதிகாரப்பூர்வமானது.
No comments:
Post a Comment