Latest News

"ஏழு பேரை விடுதலை செய்யக்கூடாது" : கே.எஸ்.அழகிரி!

ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலைவழக்கில் 7 பேர் விடுதலைக்கு அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமரை கொலைசெய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்தோருக்கு பரிந்துபேசுவது தமிழர் பண்பாடாகாது என்றும் அவர் கூறியுள்ளார் .

கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர , தமிழர்கள் என அழைப்பது சரியல்ல என்று கூறியுள்ள அவர், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார் .

newstm.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.