
சிதம்பரம் தாலுகா தெற்கு தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்த செல்வமணி மகள் சவுமியா, தனியார் கல்லூரி விடுதியில் தங்கி, கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.கடந்த ஆண்டு இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால், தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு திருமணம் நடைபெற வில்லை. இதனால் கடந்த 2-ந்தேதி சவுமியா மீண்டும் அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், சவுமியா நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சகஜமாக பேசிவிட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment