Latest News

வேல் யாத்திரை: பொறுப்புணர்வு வேண்டும் உங்களுக்கு.. பாஜகவுக்கு ஹைகோர்ட் சாடல்

சென்னை: பாஜகவுக்கு குறைந்தபட்சம் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். முருகன் கோவிலே இல்லாத பகுதிகளில் எல்லாம் ஊர்வலம் செல்வது ஏன்.. மாஸ்க் போடாமல் எப்படி ஊர்வலம் நடத்தலாம்.. எதற்காக தமிழகம் முழுவதும் ஊர்வலம் நடத்துகிறீர்கள் என்று தமிழக பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை என்ற பெயரில் ஒரு யாத்திரைக்கு திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழக காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தடையை மீறி நேற்று வேல்யாத்திரை நடத்தப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் நடத்தினர், நடத்திக் கைதானார்கள். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக காவல்துறை டிஜிபி விதித்த தடை உத்தரவை எதிர்த்து பாஜக சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஹைகோர்ட் நீதிபதிகள் பாஜகவுக்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணையின்போது நடந்த வாதங்கள் விவரம்:

பாஜக: கோவிலுக்கு செல்லும் போது நூறு பேருக்கு மேல் செல்ல மாட்டோம்.

மத்திய அரசு வழக்கறிஞர்: பேரிடர் மேலாண்மை சட்டப்படி மத்திய அரசின் அறிவிப்பில், மாநில அரசுகள் அதை நீர்த்துப்போகச் செய்ய கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வழக்கறிஞர்: 15 நவம்பருக்கு பின் 100 பேருடன் மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை.

கொரோனா நேரத்தில், தீபாவளி பண்டிகையும், கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளது. நேற்று யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியவில்லை.

"சித்து" விளையாட்டு ஆடுகிறது பாஜக.. இதுக்கெல்லாம் மயங்க மாட்டோம்.. கி.வீரமணி பொளேர்!

பாஜக: 30 நபர்கள் 15 வாகனங்களில் செல்வார்கள். இவற்றை கூட முறைப்படுத்த அரசிடம் போதிய வசதி இல்லையா?

நீதிபதிகள்: ஒருவேளை அரசு பதிவு செய்துள்ள வீடியோக்களை தாக்கல் செய்தால் கட்சி தலைமை என்ன செய்தது என தெரிய வேண்டும். குறைந்தளவிற்காவது பொறுப்புணர்வு வேண்டும். பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.

டிசம்பர் 6ம் தேதி யாத்திரையை நிறைவுப்செய்வதாக கூறியுள்ளிர்கள்... அந்த தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும். குறைவான தூரமுள்ள வழித்தடங்கள் உள்ள நிலையில், கோவிலுக்கு செல்வது - நகருக்குள் வருவது - கோவிலுக்கு செல்வது என ஏன் அமைத்தீர்கள்.

உங்கள் கட்சியினரை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். கோவிலுக்கு மட்டும் நீங்கள் செல்லவில்லை. மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்கிறீர்கள்.

உங்கள் திட்டப்படி கோவில்களில் மட்டும் கூடுவதாக குறிப்பிடவில்லை. மாநிலம் முழுதும் நீண்ட பேரணிபோல திட்டமிடப்பட்டுள்ளது. உங்கள் கட்சியினரை நீங்கள் முறைப்படுத்த வேண்டும். நீங்கள் காவல்துறையிடம் புதிதாக மனு கொடுங்க. அவர்கள் இறுதி முடிவெடுப்பார்கள்.

பாஜக: நாங்கள் 15 வாகனங்களில் 30 பேர் மட்டுமே கோயிலுக்குள் செல்லுவோம்

நீதிபதிகள்: நம் நாட்டில் அரசியல் மாச்சர்யங்களுக்கு தீர்வு காண நீதிமன்றம் பயன்படுத்தப்படுகிறது. டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது... கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன... 30 பேர் யாத்திரை செல்வதில் என்ன ரிஸ்க் இருக்கப் போகிறது... தலைவருக்கு பாதுகாப்பு கோருகிறோம்.

அரசு : பாதுகாப்பு கோரவில்லை. யாத்திரைக்கு அனுமதி கோரியுள்ளனர்.

பாஜக: வழக்கை திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும். எத்தனை பேர் யாத்திரையில் கலந்து கொள்வர், எத்தனை பேர் 65 வயதை கடந்தவர்கள் என அனைத்து முழுமையான விரிவான விண்ணப்பம் அளிக்கப்படும். அரசு நிபந்தனை விதித்தால் அதை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தயார்.

30 பேர், 15 கார்களுடன், அனைத்து விதிகளும் பின்பற்றினால் அனுமதி அளிக்கப்படுமா?

நீதிபதிகள்: பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரை முடிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூட அனுமதிக்கும் அரசு, வேல் யாத்திரையை மட்டும் எதிர்ப்பது ஏன்??

பாஜக: அப்படியானால் டிசம்பர் 5ல் முடித்து கொள்கிறோம். ராமர் கோவில் பூமி பூஜையில் வழக்கு தொடுத்த முஸ்லிம்களும் கலந்துகொண்டனர் இவ்வாறாக வாதம் நீண்டது. பாஜக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்வதாக கூறியதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

source: oneindia.com

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.